நோய்த்தொற்று அச்சுறுத்தல்: வேப்பிலை கட்டி மஞ்சள் தண்ணீர் தெளிக்கும் புதுவை கிராமங்கள்..!

அறிவியல்பூர்வமாக கொரோனா வைரஸை மஞ்சளும், வேப்பிலையும் விரட்டியடிக்கும் என்பது நிரூபிக்கப்படவில்லை. இவை இரண்டும் கிருமிநாசினி என்பதால் அவற்றை பயன்படுத்துவதால் எந்த தீங்கும் விளையாது என்பதும் உண்மை. ஆனால் இதை காரணமாக வைத்து வெளியில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

  • Share this:
கொரோனா அச்சுறுத்தல் தரும் பதற்றத்தால், வீட்டு வாசலில் வேப்பிலை மற்றும்  மஞ்சள் தண்ணீரை புதுச்சேரி அருகே உள்ள கிராமங்களில் மக்கள் தெளித்து வருகின்றனர். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள  கிராமங்களில் மக்கள் தொற்றுநோய் கிருமிகளை விரட்டுவதற்கு பாரம்பரிய முறையில் கையாளப்படும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்..

இதில், கிராமத்தில் உள்ள வீடுகளின் வாசல் பகுதியில் மாட்டு சாணம், மஞ்சள் கலந்த தண்ணீர், வேப்பிலை வைத்துள்ளதுள்ளனர். அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தவிர்ப்பதற்கு  கிராம மக்களும், மகளிர் சுய உதவிக்குழு பெண்களும் சேர்ந்து மஞ்சள் கலந்த தண்ணீர் மற்றும் வேப்பிலைகளை சாலைகளில் தெளிந்தது வருகின்றனர்.

மேலும் கிராமம் முழுவதையும் சுத்தமாக வைத்திருக்க வலியுறுத்தி வருகின்றனர்.  அரசு மூலம் கிருமிநாசினி மருந்துகள் கிராமப்புறங்களில் அடிக்கப்படாததால் பொதுமக்களே தங்களது சொந்த செலவில் கிருமிநாசினி மருந்துகளை சாலையோரம் கொட்டி வீதிகளை சுத்தமாக வைத்திருக்கும் பணியினை மேற்கொண்டனர்.

பாரம்பரிய முறையில் இருந்து விலகுவது இயற்கையை அழிப்பது போன்றவையே கொடூர நோய்க்கு காரணமாகிவிட்டது என கிராம மக்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்