"ஐயா சீக்கிரம் கடையை திறங்க" - மதுபான கடை முன் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் மதுபிரியர்கள்!

மதுபான கடை முன் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் மதுபிரியர்கள்!!

கொரோனா ஊரடங்கு தளர்வில் புதுச்சேரியில் வரும் 8 ம் தேதி முதல் மதுபான கடைகளை திறக்க அரசு முடிவு செய்து இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

  • Last Updated :
  • Share this:
மதுவிற்கு தென் இந்தியாவின் புகழ்பெற்ற பகுதியாக புதுச்சேரி விளங்குகிறது. இங்கு மதுபானம், கள், சாராயம் விற்க அனுமதி உண்டு. பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே புதுச்சேரியில் சாராய ஆலை இருக்கிறது.அந்த அளவிற்கு மதுவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்த போதும் கூட புதுச்சேரியில் மது விற்பனை நிறுத்தப்படவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் சில நாட்கள் மட்டுமே புதுச்சேரியில் மதுபான கடைகள் மூடப்படும். புதுச்சேரிக்கு முக்கிய வருவாயை ஈட்டி தரும் மது விற்பனை கொரோனா நோய் தொற்று காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா முதல் அலையின் போது கள்ளத்தனமாக சிலர் மூடிய கடைகளில் இருந்து எடுத்து விற்றதால் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டது.இதன் விளைவாக கொரோனா இரண்டாம் அலையின் போது அனைத்து மதுபானக்கடைகள், கள்-சாராயக்கடைகள் சீல் வைக்கப்ட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் முறைப்படியான மது விற்பனை புதுச்சேரியில் இல்லை. ஆனால் கள்ளத்தனமாக சாராயம்,போலி மதுபானங்கள் புதுச்சேரியில் விற்கப்படுகிறது.இதனை தடுக்கும் விதமாக காவல் துறையும் கலால் துறையும் துரிதமாகசெயல்பட்டு தினமும் மதுபாட்டில்களை பிடிக்கிறார்கள். கள்ளச்சாராயம் மற்றும் போலி மது குடித்து புதுச்சேரியில் இதுவரை உயிர்சேதம் இன்னும் நடைபெறவில்லை என்பது ஆறுதலான விஷயம் என்றாலும் ஊரடங்கில் தளர்வில் மதுபான கடைகளுக்கும் வழங்க வேண்டும். அப்போது தான் போலி மதுபான நடமாட்டத்தை தடுக்க முடியும் என அரசியல்வாதிகளே கேட்கின்றனர்.

இதில் அதிமுக ஒரு படி மேலே போய், "தற்போதுள்ள நிதி தட்டுப்பாட்டை போக்க கடந்த முறையை போல் மதுபானத்திற்கு அதிக அளவில் கொரோனா வரி விதித்து அந்த நிதியை கொரோனா நிவாரண பணிகளுக்கு பயன்படுத்திட அரசை வலியுறுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு தளர்வில் புதுச்சேரியில் வரும் 8 ம் தேதி முதல் மதுபான கடைகளை திறக்க அரசு முடிவு செய்து இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Also read: வேலையிழந்த உதவி பேராசிரியர்: கூலிக்கு பனைமரம் ஏறி நுங்கு வெட்டும் போது தவறி விழுந்து உயிரிழந்த சோகம்!!

இதனால் மது பிரியர்கள் மூடியுள்ள மதுபான கடைகளுக்கு சென்று வேடிக்கை பார்த்து விட்டு வருகிறார்கள்.இதில் தீவிர குடிமகன்கள் கடைக்கு முன் கையெடுத்து கும்பிட்டு,ஐயா சீக்கிரம் கடையை திறங்க"என அழாத குறையாக கேட்கிறார்கள்.

கொரோனா கூட வாழ்ந்து விடலாம்.. மது குடிக்காமல் வாழ முடியாது என அவர்களது குமுறல்களுக்கு பதில் அரசின் நாளைய ஊரடங்கு தளர்வில் இருக்கிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: