பி.பி.இ கிட், உணவு தரமில்லை என கூறிய செவிலியர்களுக்கு மெமோ - சர்ச்சையைக் கிளப்பும் புதுச்சேரி அரசு மருத்துவமனை நடவடிக்கை

மாதிரிப் படம்

புதுச்சேரியில் கொரோனா மருத்துவமனையில் உணவு, பி.பி.இ கிட் தரமில்லை என்று தெரிவித்த செவிலியர்களுக்கு சுகாதாரத்துறை மெமோ கொடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
நாடு முழுவதையும் புரட்டிப்போட்ட கொரோனா இரண்டாவது அலை தாக்கம் தற்போதுதான் மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் கூடுதலாக இருந்தது. தற்போது, இந்த கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும் குறைந்துள்ளது. இந்த கொரோனா பாதிப்பு காலங்களில் மருத்துவர்கள், செவிலியர்களின் பணி இன்றியமையாத ஒன்றாக இருந்துவருகிறது. அவர்கள், தங்களது உயிரைப் பணயம் வைத்து பணி செய்துவருகின்றனர்.

இந்தநிலையில், புதுச்சேரியில் கொரோனா மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு வழங்கப்படும் பி.பி.இ கிட் தரமில்லை என்றும் கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவுகள் வழங்கபடவில்லை என்றும் செவிலியர்கள் புகார் தெரிவித்து இருந்தனர். இதுதொடர்பாக அவர்கள் வாட்ஸ் அப் ஆடியோ வெளியிட்டனர். மேலும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தனர். இவை பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர், ‘உயரதிகாரிகளிடம் கலந்தாலோசிக்காமல் பி.பி.இ கிட்டின்தரம் குறித்துப் பேசிய அந்த மூன்று செவிலியர்களும் 48 மணி நேரத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும்’என்று குறிப்பிட்டிருக்கிறார். துறையில் உள்ள குறை மற்றும் பணி பாதுகாப்பு இல்லாததை சுட்டிக் காட்டிய
அனுராதா, சாந்தி, பாக்கியவதி ஆகிய 3 செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்பட்டிருப்பது சுகாதார ஊழியர்களிடைய பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: