பயிர்களுக்கு தீமை அளிக்கும் பூச்சிகளை அழிக்க புதிய கருவியை கண்டுபிடித்த புதுச்சேரி பொறியாளர்!

Web Desk | news18
Updated: August 15, 2019, 12:57 PM IST
பயிர்களுக்கு தீமை அளிக்கும் பூச்சிகளை அழிக்க புதிய கருவியை கண்டுபிடித்த புதுச்சேரி பொறியாளர்!
Web Desk | news18
Updated: August 15, 2019, 12:57 PM IST
விவசாய அறிஞர்கள் மூலம் பூச்சிகளினால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிந்து பயிர்களுக்கு தீமை அளிக்கக்கூடிய  பூச்சிகளை மட்டும் கொள்ளும் பூச்சி பொறியை புதுச்சேரியில் மின்னணு பொறியாளர் ஒருவர் கண்டறிந்ததுள்ளார். 

புதுச்சேரி லெனின் தெருவை சேர்ந்தவர் அப்துல் காதர். மின்னணு பொறியாளரான இவருக்கு விவசாயத்தின் மேல் ஆர்வம் அதிகம். அதனால் தனது பொறியாளர் வேலையை விடுத்து சொந்த ஊரான புதுச்சேரியில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார்.

அப்போது விவசாய அறிஞர்கள் மூலம் பூச்சிகளினால் ஏற்படும் தீமை குறித்து அறிந்து கொண்டார். பூச்சிகள் செயற்கை ஒளியை நோக்கி வெளியே வரும் என்கிற யோசனையைக் கொண்டு 2 வருட ஆராய்ச்சியின் மூலம் 2012-ம் ஆண்டு தன்னுடைய பூச்சி ஈர்ப்புக் கருவியைக் கண்டுபிடித்தார்.  இதற்கு 2014-ம் ஆண்டு இந்திய அரசின் காப்புரிமை கிடைத்தது.


பயிர்களுக்கு தீமை அளிக்கும் பூச்சிகளை அழிக்கும் புதிய கருவி


விவசாய உற்பத்தியில் கிட்டத்தட்ட 35% அளவை பூச்சிகள் அழித்து விடுகின்றன என்கிறது இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் (ICAR). பூச்சிகளை அழித்தொழிக்க பெரும்பாலும் நம் விவசாயிகள் இரசாயனம் சார்ந்த பூச்சிக்கொல்லிகளையே பயன்படுத்துகின்றனர். இரசாயனத்தால் பூச்சிகள் குறைந்தாலும் மண்ணுக்கும் ஆரோக்கியத்துக்கும் கேடு மட்டுமே மிச்சம்.

தீமை செய்யும் இரசாயனத்துக்கு மாற்றாகவும், இயற்கை விவசாயத்துக்கு உதவும் வகையிலும் புதிய பூச்சி பொறியை இவர் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளார்.

Loading...

இதுகுறித்து அப்துல் காதர் கூறும்போது, “ பூச்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணம் முண்டு. பல வேளாண் மற்றும் பூச்சிகள் குறித்த ஆராய்ச்சிகள் செய்தபோது பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் பெரும்பாலும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வெளி வருவதாகக் கூறுகின்றனர்.பூச்சிகள் நாம் பார்க்கும் ஒளியைத் தவிர, புற ஊதாக் கதிர்களையும் உணரும் தன்மை கொண்டவை. இதனாலேயே செயற்கை ஒளியைப் பார்த்ததும் அங்கு சென்று வட்டமடிக்கின்றன. இந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கவரும் அலைவரிசை கொண்ட ஒளியை உமிழும் கருவியைத் தயாரித்தோம்.

இதன்மூலம் பயிர்களை அழிக்கும் தட்டான் பூச்சி, காண்டாமிருக வண்டு, கதிர் நாவாய்ப் பூச்சி, காய்த்துளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சி உள்ளிட்ட பல தீய பூச்சிகள் கருவியின் LED விளக்கு நோக்கி ஈர்க்கப்படுகின்றன. LED லைட்டுக்குக் கீழே இருக்கும் பாத்திரத்தில், தண்ணீர் மற்றும் விளக்கெண்ணெய் அல்லது பிற எண்ணெயைக் கலந்து வைத்தால் அந்தக் கலவையில் பூச்சிகள் விழுந்து இறந்து விடுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து அந்த பூச்சிகளை நிலத்திலே பள்ளம் தோண்டி கொட்டிவிட்டால் அது மண்ணுக்கும் உரமாகின்றது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் பாராட்டைப் பெற்றுள்ள இந்தக் கருவியை இந்திய விவசாயிகள் அனைவரிடமும் கொண்டுசெல்லும் முனைப்பில் பல வேளாண் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

மேலும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இயற்கையை பாதிக்காத இந்தக் கருவியைப் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியும் வருகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “ இந்த கருவி கடந்த 3 வருடமாக உபயோகித்து வருவதாகவும், இதனால் பூச்சி மருந்து பயன்படுத்துவதில்லை என்றும் பூச்சிகள் இந்த கருவியால் கவரப்பட்டு விழுவதால் மகசூலும் அதிகரிக்கின்றது என்றும் கூறுகின்றனர்.

மேலும் இந்த கருவியால் பூச்சி மருந்துகள் வாங்கும் செலவே இல்லை என்றும் இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க... அழியும் நிலையில் மண்பாண்டத் தொழில்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...