முகப்பு /செய்தி /இந்தியா / Puducherry: புதுச்சேரியில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு.. முதல்முறையாக அமைச்சரவையில் இடம்பெறும் பாஜக!

Puducherry: புதுச்சேரியில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு.. முதல்முறையாக அமைச்சரவையில் இடம்பெறும் பாஜக!

புதுச்சேரி அமைச்சரவை

புதுச்சேரி அமைச்சரவை

அமைச்சர்கள் பதவியேற்பு விழா மேடைக்கு முதல்வர் ரங்கசாமி வருகை தந்த போது  வயதில் குறைந்த எம்எல்ஏக்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த இருவர் உட்பட 5 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்திரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைந்துள்ளது. இதனையடுத்து மாநில முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் பதவியேற்ற மறுநாளே அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய அமைச்சரவை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

எனினும் முதல்வர் ரங்கசாமி குணமாகி வீடு திரும்பிய போதிலும் அமைச்சரவை அமைவதில் பாஜகவுக்கும், ரங்கசாமிக்கும் இடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படாததால் இழுபறி நீடித்து வந்தது.

இதனையடுத்து பாஜகவுடன் அமைச்சரவை பதவிகளுக்கான பங்கீடு முடிந்து கடந்த வெள்ளியன்று (ஜூன் 25) அமைச்சர் பட்டியல் வெளியானது.

Also Read:   விஜய் முதல் டாப்சி வரை: நடிகர், நடிகைகள் நடத்தும் வெற்றிகரமான பிஸினஸ்கள்!

என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா ஆகியோரும் பாஜக தரப்பில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், சாய் சரவணன் ஆகியோரும் புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர். மேலும் புதுவையின் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழிசை

இதனையடுத்து புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெளியே பதவி ஏற்பு விழாவுக்கான மேடை அமைக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இன்று நடைபெற்ற இந்த பதவி ஏற்பு விழாவில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

அமைச்சர்களாக முதலில் பாஜகவைச் சேர்ந்த

நமச்சிவாயம் பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து லட்சுமி நாராயணன்,தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணன் பதவி ஏற்றனர். துணை நிலை ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைத்தார்..

சந்திர பிரியங்கா

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சந்திர பிரியங்கா அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு

புதுச்சேரியில் பெண் ஒருவர் அமைச்சராகி இருக்கிறார்.

அதே போல புதுவை அமைச்சரவையில் முதல் முறையாக பாஜக இடம்பிடித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமைச்சர்கள் பதவியேற்பு விழா மேடைக்கு முதல்வர் ரங்கசாமி வருகை தந்த போது  வயதில் குறைந்த எம்எல்ஏக்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர். அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவை திமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Puducherry, Puducherry Assembly Election 2021, Puducherry Governor, Tamilisai Soundararajan