காருக்கு எரிபொருள் நிரப்ப பங்க் மறுப்பு... தினமும் பேருந்தில் சென்றுவரும் அமைச்சர்...!

காருக்கு எரிபொருள் நிரப்ப பங்க் மறுப்பு... தினமும் பேருந்தில் சென்றுவரும் அமைச்சர்...!
அமைச்சர் கமலக்கண்ணன்
  • News18
  • Last Updated: January 4, 2020, 12:00 PM IST
  • Share this:
புதுச்சேரி அரசு பெட்ரோல் பங்கில், கோடிக்கணக்கில் ரூபாய் பாக்கி இருப்பதால், அமைச்சர்களின் கார்களுக்கு எரிபொருள் நிரப்ப மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அமைச்சர் ஒருவர் தினமும் பேருந்தில் சென்று வருகிறார்.

புதுச்சேரியில் இரண்டு கோடியே 30 லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருப்பதால் அமைச்சர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியாது என அரசின் பெட்ரோல் பங்கான அமுதசுரபி நிறுவனம் அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் அமைச்சர்களின் கார்களுக்கு அங்குள்ள அரசு பெட்ரோல் பங்கான அமுதசுரபியில் கடனுக்கு எரிபொருள் நிரப்புவது வழக்கம்.


இந்நிலையில் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனின் வாகனம் எரிபொருள் நிரப்ப அமுதசுரபி பெட்ரோல் பங்கிற்கு சென்ற போது அங்குள்ள ஊழியர்கள் எரிபொருள் நிரப்ப மறுத்துள்ளனர்.

அப்போது அமைச்சரின் ஓட்டுனருக்கும் பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அமைச்சர் கமலகண்ணன் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு தினம் அரசு பேருந்தில் பயணித்து வருகிறார்.
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்