நீண்டகாலமாக தொடர்ந்து வரும் நில விவகாரம்: ஆந்திர முதல்வருடன் புதுச்சேரி அமைச்சர் சந்திப்பு

புதுச்சேரி ஏனாமுக்கு வழங்கப்படும் குடிநீர் சம்பந்தமாக முடிவெடுக்க ஆந்திர முதல்வரை புதுச்சேரி அமைச்சரும் ஏனாம் சட்டமன்ற உறுப்பினருமான மல்லாடி கிருஷ்ணாராவ் சந்தித்து பேசினார். 

நீண்டகாலமாக தொடர்ந்து வரும் நில விவகாரம்: ஆந்திர முதல்வருடன் புதுச்சேரி அமைச்சர் சந்திப்பு
ஆந்திர முதல்வருடன் புதுச்சேரி அமைச்சர்சந்திப்பு
  • Share this:
குறிப்பிட்ட நிலத்தை புதுச்சேரி அரசுக்கு வழங்குவது தொடர்பான பிரச்சனை இரு மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக தொடர்ந்து வரும் நிலையில்,  மல்லாடி கிருஷ்ணாராவ் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை  சந்தித்து பேசினார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பிராந்தியமான ஏனாமிற்கு ஆந்திர மாநிலம் தவுலே ஸ்வரம் அணைக்கட்டில் இருந்து குடிநீர் வருகிறது. அங்கிருந்து பைப் மூலம் எடுத்து வரப்படும் தண்ணீர் ஆந்திர மாநில எல்லையில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள குளம் ஒன்றில் நிரப்பப்பட்டு ஏனாமுக்கு குடிநீருக்கு விநியோகிக்கப்படுகிறது .

இந்த நிலத்தை புதுச்சேரி அரசுக்கு வழங்குவது தொடர்பான பிரச்சனை இரு மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக விரைவாக முடிவு எடுக்கக் கோரி புதுச்சேரி சுகாதாரத்துறை  அமைச்சரும் ஏனாம் சட்டமன்ற உறுப்பினருமான மல்லாடி கிருஷ்ணாராவ் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை  சந்தித்து பேசினார். விரைவில் இது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.


மேலும் படிக்க...

தமிழகத்திற்கு மேலும் 3 ரயில்கள் இயக்க வாய்ப்பு - ரயில்வே துறைக்கு தமிழக அரசு கடிதம்..

 


 
First published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading