கொரோனாவால் முடங்கியது புதுச்சேரியின் புகழ்பெற்ற மதகடிப்பட்டு வார சந்தை ..வியாபாரிகள் வேதனை

கொரோனாவால் முடங்கியது புதுச்சேரியின் புகழ்பெற்ற மதகடிப்பட்டு வார சந்தை ..வியாபாரிகள் வேதனை

புதுச்சேரியின் ஒரே ஒரு வார சந்தைகள்

கொரேனாவால் நஷ்டத்திற்கு தான் காய்கறிகளை விற்க வேண்டியதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

 • Share this:
  புதுச்சேரியில் மதகடிப்பட்டு பகுதியில் பிரெஞ்சு காலத்திலிருந்து மிகவும் புகழ்பெற்ற மாட்டு சந்தை இயங்கி வருகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டுமே இந்த சந்தை செயல்படும். இங்கு, புதுச்சேரி, தமிழகப் பகுதிகளில் இருந்து, மாடு வாங்குவோர் வருகை தருவது தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றது. நாட்கள் ஆகஆக அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விற்பனை செய்யப்படும் சந்தையாக மாறியது.

  இந்நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் சந்தை கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. 7 மாதங்கள் பிறகு மீண்டும் டிசம்பர் மாதம் முதல் சந்தை கூடுவதற்கு மாநில அரசு தளர்வை அளித்தது. இதையடுத்து 7 மாதங்களுக்கு பிறகு மதகடிப்பட்டு சந்தை மீண்டும் கூடியது. 3 மாதங்கள் மட்டுமே இயங்கிய நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் அண்டை மாவட்டங்களில் இருந்து சந்தைக்கு மாடுகள் வரத்து பெரும் அளவில் குறைந்து விட்டது. இதனால் இன்று கூடிய சந்தை வெறிச்சோடி இருந்தது.  மாடுகள் வரத்து குறைவதால் வியாபாரிகள் வருவதில்லை. இதனால் மற்ற பொருட்களும் விற்பனையாகுவதில்லை. நஷ்டத்திற்கு தான் காய்கறிகளை விற்க வேண்டியதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். வார சந்தைக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், முக கவசம் அணியாதவர்களுக்கு 100 ரூ அபராதம் என பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் நோய் தொற்று அதிகமானால் சந்தை மீண்டும் மூடப்படுமோ என அச்சமே வியாபாரிகள் மத்தியில் நிலவுகிறது.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published: