• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மிகப் பழமையான பொருட்களை பொக்கிஷமாக பாதுகாக்கும் புதுச்சேரி நபர்! அசரவைக்கும் புகைப்படங்கள்

மிகப் பழமையான பொருட்களை பொக்கிஷமாக பாதுகாக்கும் புதுச்சேரி நபர்! அசரவைக்கும் புகைப்படங்கள்

60 ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் பயன்படுத்திய பொருட்களை இன்று காணும்போது பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.

  • Share this:
புதுச்சேரியை சேர்ந்த அய்யனார் என்ற நபர் பழங்கால பொருட்களைப் பாதுகாத்து வருகிறார். பழங்காலப் பொருட்களைப் பாதுகாக்கவும், அதன் அழிவை தடுக்கவும் பல ஆண்டுகளாக சேகரித்து வருகிறார். அந்த காலத்தில் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் முதல் கலை அலங்கார பொருட்கள் வரை சேகரித்து வைத்திருக்கிறார். பித்தளை மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட 50 ஆண்டுகள் பழமையான பாத்திரங்கள் இவற்றுள் அடங்கும்.

நம் இளைய சமுதாயத்தினர் எங்கும் பார்த்திடாதா வண்ணமயமான கெட்டில்கள், குவளைகள், கண்ணாடிகள், பானைகள், குடங்கள், பெரிய பாத்திரங்கள், விளக்குகள் மற்றும் சிலைகள் போன்ற பொருட்களையும் சேகரித்து வைத்திருக்கிறார். சிறுவயதில் வந்த ஆர்வம் காரணமாக இதனை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அய்யனார், நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை சேமித்து வைத்திருக்கிறார்.



இதுகுறித்து பேசிய அவர், சின்ன வயதில் இருந்தே பழங்கால பொருட்களை சேகரிப்பேன். கிட்டத்தட்ட இத்தனை வருடங்களில் சேமித்து வைத்த பொருட்கள் என்னையே ஆச்சர்யப்படுத்துகிறது. நான் சேகரித்துள்ள பொருட்களை ஆண்டுக்கு ஒரு முறை கண்காட்சி வைத்து மாணவர்களுக்கு காண்பித்து வருகிறேன். தற்போது இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா அபாயத்தால் கண்காட்சி வைக்க இயலவில்லை. இனிமேல் தொடர்ந்து நடத்த வேண்டும் என விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் '60 ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் பயன்படுத்திய பொருட்களை இன்று காணும்போது பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல பழங்கால பொருட்களை பார்க்கும் போது நம்முடைய வரலாறு, அதன் பண்புகள் என அனைத்தையும் உணர முடிகிறது. இதனால் அனைவராலும் எளிதாக வரலாற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. பழங்கால வரலாற்று பொருட்கள் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. இதனால் நம்முடைய வரலாறு, நமக்கு பிறகு வரக்கூடிய சந்ததிகளுக்கு தெரியாமல் போகிறது. பழங்கால பொருட்கள் அழிக்கப்படுவதை தடுப்பதே எனது லட்சியம் ஆகும்’ என்றும் அய்யனார் தெரிவித்துள்ளார்.



இவர் பெரும்பாலும் பித்தளை மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட பழங்கால பொருட்களை இந்தியா முழுவதும் சேகரித்து வருகிறார். குறிப்பாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அவரது நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட பழங்கால வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள் அடங்கிய பானையை கண்டுபிடித்தார். இதேபோல், ஜங்கான் மாவட்டத்தில் வாரங்கல்-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள பெம்பார்த்தி கிராமத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று நிலத்தை சமன் செய்ய தொடங்கியது.

Must Read | இனி மழைக்காலம்… உங்க கார பத்திரமா பாத்துங்கோங்க!! இதோ சில டிப்ஸ்..!

நிலத்தில் கீழ் ஏதோ ஒன்று தட்டுப்பட, அதனை தோண்டி எடுத்துப் பார்த்தனர். அதில் மிகப்பழமையான பல நகைகள் இருந்தன. அவை அக்காலத்தில் கடவுள் சிலைகளுக்கு அலங்கரித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறித்து. காதணிகள், மூக்குத்தி, கணுக்கால் மற்றும் மணிகள் ஆகியவைகளும் இருந்தன. இந்த பானையில் 1.72 கிலோ வெள்ளி மற்றும் 187.45 கிராம் தங்கம் இருந்தது. 6.5 கிராம் அளவுள்ள மாணிக்கங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பானை செம்பினால் ஆனது. இந்த பானை 1,200 கிராம் எடை கொண்டது ஆகும்.



51 தங்க மணிகள், 22 தங்க காதணிகள், 11 தங்க 'மங்கள சூத்திரங்கள்', 26 வெள்ளி குச்சிகள் மற்றும் ஐந்து வெள்ளி சங்கிலிகள் போன்றவை இருந்தது. கிராமத்தில் 'புதையல்' பற்றிய செய்தி பரவியதால், புதையல் கிடைத்தவுடன் தேங்காய் உடைக்க ஏராளமானோர் அந்த இடத்திற்கு வந்து பிரார்த்தனை செய்தனர். அம்மன் அருளால் தான் இது கண்டுபிடிக்கப்பட்டது என்று ஊர் மக்கள் நினைத்தனர். கண்டுபிடிக்கப்பட்ட இந்த பழங்கால பொருட்கள் ‘காகதீய’ வம்சத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: