• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு - முழு விவரம்

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு - முழு விவரம்

 புதுச்சேரி

புதுச்சேரி

புதுச்சேரி யூனியன் பிரசேத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியாகி உள்ளது.

  • Share this:
    புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 1,149 பதவிகளுக்கும், 5 நகராட்சித் தலைவர் பதவிகள், 116 நகராட்சி கவுன்சிலர் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 108 கொம்யூன் பஞ்சாயத்து கவுன்சில் உறுப்பினர், 108 கிராம பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் 812 கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்) உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடக்கிறது. அதன்படி நவம்பர் 02, 07, 13 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    முதல்கட்ட தேர்தல்:
    11-10-2021 - வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்
    18-10-2021 - வேட்புமனு தாக்கல் கடைசி நாள்
    20-10-2021 - வேட்புமனு பரிசீலனை

    22-10-2021 - வேட்புமனுக்களை திரும்ப பெறுதல்
    02-11-2021 - வாக்குப்பதிவு

    இரண்டாம் கட்ட தேர்தல்:
    15-10-2021 - வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்
    22-10-2021 - வேட்புமனு தாக்கல் கடைசி நாள்
    25-10-2021 - வேட்புமனு பரிசீலனை
    27-10-2021 - வேட்புமனுக்களை திரும்ப பெறுதல்
    07-11-2021 - வாக்குப்பதிவு

    மூன்றாம் கட்ட தேர்தல்:
    22-10-2021 - வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்.
    29-10-2021 - வேட்புமனு தாக்கல் கடைசி நாள்.
    30-10-2021 - வேட்புமனு பரிசீலனை.
    02-11-2021 - வேட்புமனுக்களை திரும்ப பெறுதல்.
    13-11-2021 - வாக்குப்பதிவு
    கொட்டும் மழையில் குருவிகளை திருடிய இளைஞர்கள்… குருவி திருடர்களை வலைவீசி தேடும் போலீஸ்!

    மூன்று கட்ட தேர்தலும் நிறைவடைந்த பிறகு நவம்பர் 17-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இன்று முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் அறிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: