• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு : மூன்று கட்டங்களாக தேர்தல்

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு : மூன்று கட்டங்களாக தேர்தல்

 புதுச்சேரி

புதுச்சேரி

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்குகிறது.

  • Share this:
    புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் அறிவித்துள்ளார்.

    புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

    அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு அக்டோபர் 25 ஆம் தேதியும், 3ம் கட்டமாக கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்டோபர் 28 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

    முதல்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7 ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11 ஆம் தேதி நிறைவடைகிறது. மூன்றாம்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி நிறைவடைகிறது.

    மூன்றுகட்ட வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை. இதில் கடைசி ஒரு மணி நேரமாக மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 755 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அதில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 202 பேர் ஆண்கள், 5 லட்சத்து 30 ஆயிரத்து 930 பெண்கள் என 117 பேர் திருநங்கைகள் உள்ளனர்.

    Must Read : ‘ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு’ : ஏற்றுமதி மாநாட்டை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

    முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 21.

    இரண்டாம் கட்ட தேர்தல் - அக்டோபர் 25.

    மூன்றாம்கட்ட தேர்தல் - அக்டோபர் 28.

    வாக்கு எண்ணிக்கை - அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: