• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Puducherry liquor shops open | புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகளுக்கு அனுமதி

Puducherry liquor shops open | புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகளுக்கு அனுமதி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

புதுச்சேரியில் தினசரி கொரோனா பாதிப்பு 500க்கும் கீழ் குறைந்துள்ளதையடுத்து, அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார்.

  • Share this:
புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மதுபானக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா 2வது அலையின் தாக்கம் சற்று தணியத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள், இறைச்சி கடைகள், காய்கறி போன்ற கடைகள் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. புதுச்சேரியில் நாளொன்றுக்கு 2 ஆயிரத்தை தாண்டி பாதிப்பு பதிவாகி வந்தது. இறப்பும் 25க்கு மேல் பதிவானது. இந்நிலையில், 2 மாதங்களுக்கு பின்னர் நேற்று தினசரி பாதிப்பு 500க்கு கீழ் சென்றது. புதிதாக 482 பேருக்கும் மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 24 மணி நேரத்தில் 1,196 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,561 ஆகவும், உயிரிழப்பு 1,638 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 1,00,377 பேர் குணமடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொற்று குறைந்துள்ளதையடுத்து புதுச்சேரி மாநிலத்துக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பார்களுக்கு அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.  ஒரு மாதத்துக்கு பின்னர் மதுக்கடைகள் திறப்பதால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: