• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரி விடுதலை நாள் விழா : முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி மரியாதை

புதுச்சேரி விடுதலை நாள் விழா : முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி மரியாதை

புதுச்சேரி விடுதலை நாள் விழா

புதுச்சேரி விடுதலை நாள் விழா

புதுச்சேரி விடுதலை நாள் விழா கடற்கரை சாலையில் இன்று கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, அரசு பள்ளியின் 12ஆம் வகுப்பு  மாணவர்கள் அனைவருக்கும்  மடிக்கணினி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

  • Share this:
பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி சுதந்திரம் பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதையடுத்து புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் 1954ம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி பிரெஞ்சு கொடி இறக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

இருப்பினும் இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்ததற்கான ஒப்பந்தத்திற்கு 8 ஆண்டுகளுக்கு பின் 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று பிரெஞ்ச் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதுவரை நவம்பர் 1ஆம் தேதியன்று புதுச்சேரி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வந்தது. 1962ம் ஆண்டுக்கு பின் புதுச்சேரியின் சுதந்திர தினம் நவம்பர் 1ந் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 16ந் தேதியாக மாற்றப்பட்டது.

புதுச்சேரியின் உண்மையான விடுதலை நாள் நவம்பர் 1ஆம் தேதி என்றும் அன்றைய தினத்தையே விடுதலை நாளாக கொண்டாட  அரசு அறிவித்தது. இதன்படி புதுச்சேரி விடுதலை நாள் விழா  கடற்கரை சாலையில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கடற்கரை சாலையில் தேசிய கொடியை முதல்வர் ரங்கசாமி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து காவல் துறையின் அணிவகுப்பை பார்வையிட்டார். அடுத்து முதல்வர் ரங்கசாமி விடுதலை நாள் உரையாற்றினார். அவர் பேசுகையில், சாலைகளை சீரமைக்க 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அரசு துறைகளில்  காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த முதல் இரண்டு பெண்களுக்கு திருமண நிதி 75,000 ல் இருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்த முதல்வர், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையில் 18 வயது ஆதிதிராவிட ஆண்-பெண்களுக்கு தலா 500 ரூ வங்கி கணக்கில் செலுத்தப்படும். தற்போது தீபாவளியை யொட்டி1,24,412 பேருக்கு 6.22 கோடி ரூபாய் குடும்பத்தலைவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என  ரங்கசாமி அறிவித்தார்.

அரசு பள்ளியின் 12ஆம் வகுப்பு  மாணவர்கள் அனைவருக்கும்  மடிக்கணினி வழங்கப்படும் என அறிவித்த முதல்வர், புதுச்சேரியில் பள்ளி திறக்கும் தினத்தில் இருந்தே மதிய உணவு வழங்கப்படும், புதுச்சேரி அரசின் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான பள்ளி அரசு பள்ளியாக மாற்றப்படுகிறது என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

Must Read : School holiday | கன மழையால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விமுமுறை

தொடர்ந்து காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றார். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் விடுதலைப் போராட்ட தியாகிகள் பங்கேற்றனர். இதே போல் காரைக்காலில் நடந்த விடுதலை நாள் விழாவில் அமைச்சர் சந்திர பிரியங்கா, மாகி பிராந்தியத்தில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், ஏனாம் பிராந்தியத்தில் அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: