புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கொரோனா தொற்று இல்லை - சுகாதாரத்துறை அறிவிப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கொரோனா தொற்று இல்லை - சுகாதாரத்துறை அறிவிப்பு
கிரண்பேடி
  • Share this:
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.நாள்தோறும் சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. உச்சகட்டமாக 112 பேர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கதிர்காமம் அரசு மருத்துவமனை, ஜிப்மர் ஆகியவற்றில் நோயாளிகளின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவக்கல்லூரி படுக்கைகளையும் பயன்படுத்த அரசு நடவடிக்கை  எடுத்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று அரசு அலுவலகங்களிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல அரசு  அலுவலகங்கள் அடுத்தடுத்து 2 நாட்கள் மூடப்பட்டு வருகிறது. புதுச்சேரி சட்டமன்றம், நகராட்சி அலுவலகம் நகர அமைப்பு குழுமம், காவல்நிலையங்கள், போக்குவரத்துத்துறை ஆகியவற்றில் ஊழியர்களுக்கு ஏற்பட்ட தொற்றால்  மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இந்நிலையில்  ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆளுநர் அலுவலகம் 48 மணிநேரத்திற்கு  மூடப்பட்டது. தொற்று  ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த பலரும் தனிமைப்படுத்தப்பட்டனர். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்ட அதிகாரிகள்,  ஊழியர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் பரிசோதனை நடத்தப்பட்டது.


இந்த பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில்  கிரண்பேடி மற்றும்  அதிகாரிகளுக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளது. இதுகுறித்து  ராஜ்நிவாஸ் செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆளுநர் மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்ட அலுவலக ஊழியர்கள், அதிகாரிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையிலும்  யாருக்கும் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளுநர்  மாளிகை முழுவதும் இரண்டாவது நாளாக இன்றும்  கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் இரண்டாவது நாளாக ஆளுநர்  அலுவலகம் மூடப்பட்டதால் ஊழியர்கள் உள்ளிட்ட யாரும்  மாளிகைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading