புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் - கமல்ஹாசன்
Kamalhaasan

கமல்ஹாசன்
- News18 Tamil
- Last Updated: August 3, 2020, 9:16 PM IST
புதுச்சேரியில் ஆட்சி அமைத்திடும் சூழலை உருவாக்குவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளபட்ட பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார்.
இதன்பின் எதிர்காலத்தில் மக்கள் நீதி மய்யம் புதுச்சேரியில் ஆட்சியில் அமரும் அளவிற்கு கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் புதுச்சேரி மாநில தலைவர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் தங்கவேலு உள்ளிட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநிலப் பொதுச்செயலாளர்கள், பொருளாளர், தொகுதி நிர்வாகிகள், மகளிர் அணி, இளைஞர் அணி உள்ளிட்ட மாநில அணி நிர்வாகிகள் பட்டியலையும் கமல்ஹாசன் வெளியிட்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளபட்ட பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார்.
இதன்பின் எதிர்காலத்தில் மக்கள் நீதி மய்யம் புதுச்சேரியில் ஆட்சியில் அமரும் அளவிற்கு கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் புதுச்சேரி மாநில தலைவர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் தங்கவேலு உள்ளிட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.