ஹோம் /நியூஸ் /national /

மருத்துவக் கல்லுாரியில் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய மாணவர்கள்

மருத்துவக் கல்லுாரியில் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய மாணவர்கள்

ஹோலிப் பண்டிகை

ஹோலிப் பண்டிகை

Holi 2022: கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நடைபெறாமல் இருந்த ஹோலிப் பண்டிகை இந்த ஆண்டு புதுச்சேரியில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. 

  • News18
  • 1 minute read
  • Last Updated :

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் ஹோலி பண்டிகையை  மாணவ - மாணவியர் ஆட்டம், பாட்டம் என உற்சாகமாக கொண்டாடினர்.

வடமாநில மக்களின் வசந்த விழாவாக கருதப்படும் ஹோலி பண்டிகை  நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில்  ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

மாணவ- மாணவியர் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை துாவியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடினர். மேலும், பள்ளத்தில் தண்ணீரை நிரப்பி, சேற்றில் விளையாடி மகிழ்ந்தனர்.மேலும் பிரபலமான பாடல்களை பாட விட்டு ஆட்டம் போட்டனர் மாணவர்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நடைபெறாமல் இருந்த ஹோலிப்பண்டிகை இந்த ஆண்டு புதுச்சேரியில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Holi Celebration