Puducherry | புதுச்சேரியில் கொரோனா பரவல் 50% குறைந்தது: தமிழிசை தகவல்

புதுச்சேரியில் கொரோனா பரவல் 50 சதம் குறைந்தது: தமிழிசை தகவல்

புதுச்சேரியில் கொரோனா பரவல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

  • Share this:
புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய ஏழு பிராண வாயு சுவாசக் கருவிகளை அரசு மருந்தகத்திலிருந்து பெற்று சுகாதாரத்துறையிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று ஒப்படைத்தார். அதை சுகாதாரத்துறை செயலர் டாக்டர் அருண் பெற்றுக்கொண்டார். அப்போது துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ‘மத்திய அரசு இதுவரை 17 சுவாசக் கருவிகளை புதுச்சேரிக்கு வழங்கியுள்ளது. புதுச்சேரி அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 350 சுவாச கருவிகள் , 1,800 பிராணவாயு படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரெம்டெசிவர், பூஞ்சை மருந்து போன்றவை மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

அரசின் முயற்சியால் புதுச்சேரியில் கொரோனா பரவல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதர மாநிலங்களில் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போது, புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு நல்ல பலனை தந்துள்ளது என்ற அவர், தடுப்பூசி மட்டுமே முழு எதிர்ப்பு ஆயுதம். அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளோரில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் என தெரிய வந்துள்ளது.



இதுவரை புதுச்சேரியில் 2.8 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றார். வாகனங்கள் பழுது நீக்குவது போன்ற சுய தொழில் செய்வோருக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்களின் வாழ்வு ஆதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகதான் மனிதாபிமான அடிப்படையில் இந்த தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க... ஊரடங்கு விதிகளை பின்பற்றி கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டும்..



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: