புதுச்சேரியில் ரங்கசாமியை தோற்கடித்து வெற்றி பெற்ற சுயேட்சை எம்எல்ஏ பாஜகவிற்கு ஆதரவு

பாஜக

புதுச்சேரியில் இன்று பாஜக சட்டமன்ற கட்சித் தலைவராக நமச்சிவாயம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

  • Share this:
புதுச்சேரியில் ரங்கசாமியை எதிர்த்து ஏனாம் தொகுதியில் வெற்றி பெற்ற சுயேட்சை எம்எல்ஏ பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இந்திராகாந்தி சிலை அருகே உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது.
கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி, பாஜக தேசிய பொதுச்செயலாளர் சிடி.ரவி, பாஜக பொறுப்பாளர்கள் நிர்மல்குமார் சுரானா, ராஜீவ்சந்திரசேகர் எம்பி, தமிழக பாஜக மாநில தலைவர் முருகன், மாநில தலைவர் சாமிநாதன், எம்எல்ஏக்கள் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம், ஏம்பலம் செல்வம், ஜான்குமார், சாய்சரவணக்குமார், விவியன்ரிச்சர்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏனாம் தொகுதியில் ரங்கசாமியை எதிர்த்து வெற்றி பெற்ற
சுயேச்சை எம்எல்ஏ கோலப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் இக்கூட்டத்தில் பங்கேற்று பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தார். கூட்டத்தில் பாஜக சட்டமன்ற கட்சித் தலைவராக நமச்சிவாயம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் படிக்க... CM Rangasasmy | புதுச்சேரி முதலமைச்சராக பதவி ஏற்றார் ரங்கசாமி!உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: