• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு அனுமதி: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு அனுமதி: ஆளுநர் தமிழிசை

கோப்புப் படம்

கோப்புப் படம்

புதுச்சேரியில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு தடை இல்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வரும் பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படியும் மத்திய அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பண்டிகை காலத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையை பல்வேறு மாநிலங்களும் தீவிரப்படுத்தியுள்ளது.

    அந்தவகையில், நாடு முழுவதும் வருகிற 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் சிலைகள் வைப்பதற்கும் அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மேலும் தனி நபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராக சென்று சிலையை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் வழிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    Also read: விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை ஏன் - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

    இந்நிலையில், புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்படுவதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    மேலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்றும், தெலுங்கானாவில் உள்ளதை போன்று புதுச்சேரியிலும் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: