Ki Rajanarayanan : எழுத்தாளர் கி.ரா. உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அஞ்சலி!

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்

  • Share this:
    மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் கி.ரா. என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் வயது மூப்பின் காரணமாக, புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு  காலமானார்.

    கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் கி.ராஜநாராயணனின்  மறைவுக்கு பல்வேறு எழுத்தாளர்களும், அரசியல் தலைவர்களும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அந்தவகையில்,  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் சென்று, கி.ராஜநாராயணன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் லாஸ்பேட்டையில் உள்ள கி.ரா.வின் இல்லத்தை நினைவு நூலகமாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், நாட்டுப்புற இலக்கியத்தை முதன்மைப்படுத்தியதில் கி.ராவுக்கு தனி இடம் உண்டு என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் கதை இலக்கியத்தில் புதிய திசைவழியை உருவாக்கி கொடுத்த கரிசல் இலக்கியத்தின் முன்னோடி .கி.ரா. என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இதேபோல், மறைந்த எழுத்தாளர் கி.ரா.அவர்களின் உடலுக்கு புதுச்சேரி  முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, லாஸ்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

    செய்தியாளர்: இளவமுதன்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: