புதுச்சேரியில் அரசு கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் உள்ள குறைபாடுகளின் காட்சிகள் வெளிவந்துள்ளதன் எதிரொலியாக துணைநிலை ஆளுநர் தமிழிசை பி.பி.கிட் உடை அணிந்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், உருளையன்பேட்டை நேரு நகரை சேர்ந்த மதிவதனன் (27) கொரோனா நோயால் உயிரிழந்தார்.
இவருக்கு போதிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் தாம் தெரிவித்ததாகவும், எனினும் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதாலேயே மதிவதனன் உயிர் இழந்துள்ளதாகவும் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தெரிவித்துள்ளார்.
அரசு கொரோனா மருத்துவமனையில் உரிய சிகிச்சை கிடைப்பதில்லை என்றும் மரணிப்பதை தவிர வேறுவழியில்லை என்றும் எம்எல்ஏ நேரு குற்றச்சாட்டினார்.
இந்த நிலையில் அரசு கொரோனா மருத்துவமனையில் குவியும் நோயாளிகளால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு மருத்துவர்கள் திணறும் செய்தி வெளியானதன் எதிரொலியாக , புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
பி.பி.இ. கிட் கவச உடை அணித்து கொரோனா வார்டுகளில் நேரடி ஆய்வு மேற்கொண்ட தமிழிசை சௌந்தரராஜன், அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,
ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை தினமும் எடுத்து வருகிறோம்.தற்போது 100 செவிலியர்கள் பணியமற்றப்படுகின்றனர். அவர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும் படிக்க... வெண்ணிலா கபடிக்குழு புகழ் நிதிஷ் வீரா கொரோனாவுக்கு பலி
புதுச்சேரியில் மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் வசதிகள் உள்ளன; ஆனால் மக்களிடம் தவறான கருத்து பரப்பப்படுகிறது என்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் கோவிட் பரிசோதனை மையம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Pudhucherry, Tamilisai Soundararajan