புதுச்சேரியில் கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா ரூ.3,000 நிவாரணத்தை முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
கடந்த மே 26-ஆம் தேதி, எம்எல்ஏக்கள் பதவியேற்றபோது, இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். இதனையடுத்து ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு, உரிய நிதி ஆதாரங்கள் திரட்டப்பட்டு, கொரோனா நிவாரணத்தொகை, பொதுமக்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
அதன்படி முதல் தவணை ரூ.1,500, அவரவர் வங்கிகணக்கில், செவ்வாய்க்கிழமை முதல் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த வகையில், புதுச்சேரியில் உள்ள மொத்தம் உள்ள 3,46,388 குடும்ப அட்டைதாரர்களுக்கும், முதல் தவணையாக ரூ. 1500 வீதம் இரு தினங்களாக செலுத்தப்பட்டு வருகிறது. ரூ.51 கோடியே 96 லட்சம் அளவில் தொகை செலுத்தப்பட்டு உள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.