புதுச்சேரியில் இன்று முதல் இ-பாஸ் முறை ரத்து

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

 • Share this:
  புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

  கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுக்க இ பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், மாநிலங்களுக்கிடையேயும், மாநிலங்களுக்குள்ளும் தனிநபர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு எவ்விதத் தடையும் விதிக்கக் கூடாது என மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியிருந்தது. இதனை ஏற்று புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கும் இ-பாஸ் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் இ பாஸ் முறை ரத்து அமலுக்கு வருகிறது.

  புதுச்சேரி இ-பாஸ் ரத்து


  தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், போக்குவரத்துக்கு எந்த தளர்வும் வழங்கப்படவில்லை.இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 17 ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு, தனிநபர் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று, தமிழக அரசும் இபாஸ் குறித்து விரைவில் முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  Published by:Gunavathy
  First published: