மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்ய மாநில அரசு அனுமதி - மதுப்பிரியர்கள் உற்சாகம்

மதுவிற்பனை

 மதுக்கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

 • Share this:
  மதுக்கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மதுபாட்டில்களை வாடிக்கையாளர்களுக்கு டோர் டெலிவரி செய்ய புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

  கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய   ஊரடங்கு அமலில் இருந்தது. தொற்று பாதிப்பு  குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அளித்திருக்கிறது . குறிப்பாக அனைத்து விதமான மதுக்கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  Also Read : 12 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

  அதேசமயம் மது பார்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.  மதுக்கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கலால்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு மதுபானக் கடைகள் இந்த முறையை கடைப்பிடிக்கலாம் என்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மட்டும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆன்லைன் செயலி மூலமும், போன் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானங்களை டோர் டெலிவரி செய்வதற்கான பணிகளை மதுக்கடை உரிமையாளர்கள் துவக்கியிருக்கின்றனர் .
  Published by:Vijay R
  First published: