முடங்கிய மீன்பிடித் தொழில்: மீன்பிடித் தடைக்காலத்தைக் குறைக்கக் கோரும் மீனவர்கள்..!

இறைச்சி மற்றும் மீன் கடையை திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் மீன் விற்பனைக்கு வந்தால் விரட்டி அடிக்கிறார்கள்

முடங்கிய மீன்பிடித் தொழில்: மீன்பிடித் தடைக்காலத்தைக் குறைக்கக் கோரும் மீனவர்கள்..!
harbour
  • Share this:
கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் ஏப்ரல் 15-ம் தேதி துவங்கி 61 நாட்கள் நீடிக்க  இருக்கிறது. ஆனால் கொரோனா காரணமாக கடந்த 20 நாட்களாய் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இன்னும் 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தவு நீடிக்கும் என்பதால் புதுச்சேரி-காரைக்காலில் உள்ள  24 மீனவ கிராமங்களில் 3 மாத காலங்களுக்கு மீன்பிடி தொழில் பாதிக்கப்படுகிறது. இதனால் புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மீன்பிடித்தொழில் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும் நோயில் இருந்து மக்களை காப்பதே முக்கியம். இதற்காக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். ஆனால் மீனவர்களை பற்றி அரசு கவலை கொள்ளவில்லை என்பது மீனவர்களின் ஆதங்கம்.
கொரோனா என அறிவித்தவுடன் துறைமுகத்தில் அனைத்து மீன்பிடி பொருட்களை போட்டுவிட்டு ஓடி விட்டோம். மீனவர்களின் நலன் பற்றி அரசு இதுவரை வாய்திறக்கவில்லை. மீனவர்கள் எப்போதும் நிவாரணம் கேட்பார்கள் என அரசு பயப்படுகிறது. எங்களுக்கு அது முக்கியமில்லை. நோயில் இருந்து மக்களை காப்பாற்றினால் போதும் என்கிறார் விசைபடகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல்.


இறைச்சி மற்றும் மீன் கடையை திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் மீன் விற்பனைக்கு வந்தால் விரட்டி அடிக்கிறார்கள். அதனால் மீன்பிடிக்க போக மாட்டோம் என்றும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா அறிவிப்பு வருவதற்கு முன் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றவர்கள் பிடித்து வந்த மீன்கள் வீணாகின. இதனால் ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.கொரோனா அச்சுறுத்தலால்  ஒரு மாதம் காலம் மீன்பிடி தடை படுகிறது. ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை தடைக்காலம் துவங்க இருக்கிறது. இந்த தடைக்காலத்தை ஒரு மாத காலத்திற்கு குறைக்க வேண்டும் என விசைபடகு உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர் காங்கேயன் கோரிக்கை வைக்கிறார்.
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading