புதுச்சேரி மீனவர் வலையில் சிக்கிய ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள அரிய வகை எலிப் பூச்சி!

புதுச்சேரி மீனவர் வலையில் சிக்கிய ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள அரிய வகை எலிப் பூச்சி!
புதுச்சேரி மீனவர்
  • Share this:
புதுச்சேரியைச் சேர்ந்த மீனவரின் வலையில் எலிப் பூச்சி என்று அழைக்கப்படும் அரியவகை கடல் உயிரினம் சிக்கியுள்ளது.

புதுச்சேரி மூர்த்தி புது குப்பத்தைச் சேர்ந்தவர் மீனவர்  கலைஞானம். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மேலும்  3 மீனவர்களுடன் நேற்று இரவு மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றார். இன்று அதிகாலை மீன் பிடித்து கரை திரும்பி வந்து மீன்களை வலையிலிருந்து எடுத்தபோது நண்டை போல காட்சியளிக்கும் அரியவகை எலி பூச்சி இருப்பதை கண்டார்.

வழக்கமான எலி பூச்சி 10 முதல் 50 கிராம்  எடை மட்டுமே இருக்கும். ஆனால் கலைஞானம்  வலையில் சிக்கிய எலி பூச்சியின் எடை ஒரு கிலோ. மிகப்பெரிய அளவில் இருந்த இது போன்ற அரிய வகை  எலி பூச்சி மீனவர் வலையில்  கிடைப்பது அரிதான விஷயம்.


அரிய வகை எலிப் பூச்சி


மருத்துவக் குணம் கொண்ட இந்த எலி பூச்சி வகை ஐந்து ஆயிரம் ரூபாய் வரை ஏலம் போகும் கூடியது. இருப்பினும் இதன் மருத்துவக் குணத்தை கருதி கலைஞானம் தனது குடும்பத்தாருடன் சமைத்து சாப்பிட்டு விட்டதாக தெரிவிக்கிறார்.

Also see:
First published: February 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்