கொரோனா காரணமாக வீராம்பட்டினம் கோயில் தேரோட்டம் ரத்து

கொரோனா காரணமாக புதுச்சேரியின் புகழ்மிக்க வீராம்பட்டினம் கோயில் தேரோட்டம் ரத்து  செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக வீராம்பட்டினம் கோயில் தேரோட்டம் ரத்து
வீராம்பட்டினம் கோயில் தேரோட்டம் ரத்து
  • Share this:
புதுச்சேரி வீராம்பட்டினம்  கடற்கரை பகுதியில் அமைந்துள்ள செங்கழுநீர் அம்மன் கோயில் தேர் திருவிழா ஒவ்வொரு ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியில் நடைபெறுவது வழக்கம்.

புதுச்சேரியின் பாரம்பரியமிக்க இந்த தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் வடம்பிடித்து இழுத்து துவக்கி வைப்பது மரபாக கொண்டு நடைபெற்று வருகிறது.

Also read... விடாமல் கேள்விகளை முன்வைத்த செய்தியாளர் - பதில் கூற முடியாமல் தடுமாறிய டிரம்ப்


தற்பொழுது கொரோனா  நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருப்பதை தொடர்ந்து பல்வேறு மத நிகழ்ச்சிகளும் பொது நிகழ்ச்சிகளுக்கும் அரசல் தடை செய்யப்பட்டுள்ளது.அந்தவகையில் வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேரோட்ட திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 14ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவை ஒட்டி வழக்கமாக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் வீராம்பட்டினம் கடலோர பகுதி விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆனால் கொரோனா  காரணமாக இந்த பகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading