• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Corona Vaccine | சுதந்திர தினத்திற்கு முன்பாக புதுச்சேரியில் அனைவருக்கும் தடுப்பூசி: துணைநிலை ஆளுநர் தமிழிசை தகவல்

Corona Vaccine | சுதந்திர தினத்திற்கு முன்பாக புதுச்சேரியில் அனைவருக்கும் தடுப்பூசி: துணைநிலை ஆளுநர் தமிழிசை தகவல்

துணைநிலை ஆளுநர் ஆலோசனை

துணைநிலை ஆளுநர் ஆலோசனை

புதுச்சேரியில் ஆறு கிராமங்களிலும் காரைக்கால் மாவட்டத்தில் நான்கு கிராமங்களிலும்  100% தடுப்பு ஊசி செலுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்த தமிழிசை, ‘ இந்த சாதனையை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

  • Share this:
    புதுச்சேரி மாநிலத்தில் சுதந்திர தினத்திற்கு முன்பாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரியில் கொரோனா தடுப்பு குறித்த உத்திகள் மற்றும் சவால்கள் குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலக கருத்தரங்க அறையில்  நடைபெற்றது. தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி  துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஹைதராபாத்தில் இருந்து காணொளி வாயிலாக கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தலைமைச் செயலர்
    அஷ்வனி குமார், நிதித்துறைச் செயலர் அசோக் குமார், உள்ளாட்சித் துறைச் செயலர் வல்லவன், சுகாதாரத்துறைச் செயலர் அருண்,  புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் உள்ளிட்டோரும்   கூட்டத்தில் பங்கேற்றனர்.

    புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் பற்றிய புள்ளி விவரப் படக் காட்சியை சுகாதாரத்துறை அதிகாரிகள் காட்சிப்படுத்தி விளக்கினர். புதுச்சேரியில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்காக அரசு எடுத்து வரும் தீவிர முயற்சிகளுக்கு அப்பாலும் இலக்கை எட்டுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் சவால்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது,

    மேலும் படிக்க.. புதுச்சேரியில் இன்று முதல் மதுபானக் கடைகள் திறப்பு..

    கலந்துரையாடலின் முடிவில் பேசிய துணைநிலை ஆளுநர், புதுச்சேரியில், கடந்த இரண்டு மூன்று மாதங்களில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதற்காகப் முனைப்புடன் பணியாற்றிய தலைமைச் செயலர், துறைச் செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அரசு அதிகாரிகள், சுகாதாரம் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    புதுச்சேரியில் ஆறு கிராமங்களிலும் காரைக்கால் மாவட்டத்தில் நான்கு கிராமங்களிலும்  100% தடுப்பு ஊசி செலுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்த தமிழிசை, ‘ இந்த சாதனையை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். வரும் சுதந்திர தினத்திற்கு முன்பாக புதுச்சேரியில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியாக வேண்டும் என்ற இலக்கோடு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

    தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிராக நமக்கு இருக்கும் ஆயுதம் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் மட்டுமே எதிர் வரும் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள முடியும் என்பதை விளக்க வேண்டும் என்றும் தெரிவித்த  துணைநிலை ஆளுநர் தமிழிசை , தடுப்பூசி போடுவதை  தீவிரப்படுத்துவதற்காக  ஒரு வாரம்
    முழுவதும் "தடுப்பூசி பிரச்சார வாரமாக" கடைபிடித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

     


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: