யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார்மயம்: போராட்டத்தில் இறங்கிய புதுச்சேரி ஊழியர்கள்

யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார்மயம்: போராட்டத்தில் இறங்கிய புதுச்சேரி ஊழியர்கள்
புதுச்சேரி ஊழியர்கள் போராட்டம்
  • Share this:
யூனியன் பிரதேசங்கள் மின்துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசு நடவடிக்கைக்கு புதுச்சேரி அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அரசின் மின்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து  மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு என்ற அமைப்பை  உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் பலகட்ட போராட்டம் நடந்து வருகிறது. இன்று ஒட்டுமொத்தமாக பணியை புறக்கணித்து மின்துறை தலைமை அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஒன்று கூடினர். அங்கு சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்துறை தனியார்மயத்தை எதிர்த்து கோஷமிட்டனர். ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தியதால் மின்துறை வசூல் மையங்கள் செயல்படவில்லை. மின்துறை புகார்களை ஊழியர்கள் சீரமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also see:
First published: June 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading