Puducherry Election Result 2021: புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது... திமுக முன்னிலை...

Puducherry Election Result 2021: புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது... திமுக முன்னிலை...

புதுச்சேரி

கொரொனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
புதுச்சேரியின் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கியது.
மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு 6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள
23 தொகுதிகளுக்கான வாக்குகள் லாஸ்பேட்டையில் உள்ள மூன்று மையங்களில் எண்ணப்படுகின்றன. காரைக்காலில் 5, மாகி, ஏனாமில் தலா ஒன்று என 7 தொகுதிகளுக்கு எண்ணப்படுகிறது.

கொரொனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அறையில் போடப்பட்ட 7 டேபிள்கள் 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் முடிவுகள் தாமதமாகும் என தேர்தல் துறை தெரிவித்துவிட்டது.

முகவர்களை சோதனை செய்யும் போலீஸ் - புதுச்சேரி


முதல்கட்டமாக

1. மண்ணாடிப்பட்டு
2. மங்கலம்
3. கதிர்காமம்
4. காமராஜ் நகர்
5. லாஸ்பேட்டை
6.உப்பளம்
7.நெல்லித்தோப்பு
8. ஏம்பலம்
9.காரைக்கால் வடக்கு
10.நெடுங்காடு
11.மாகி
12.ஏனாம்

ஆகிய 12 தொகுதிகளின் வாக்கு எண்ணப்படுகிறது. இதன் முடிவுகள் காலை 11 மணிக்கு தெரியவரும்.

மேலும் படிக்க... 

Weather Update | தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...   

Tamil nadu election results 2021 : தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை எத்தனை சுற்றுகள்... எப்படி நடைபெறுகிறது?

அடுத்து 10 தொகுதிகளான

1. திருபுவனை
2. வில்லியனூர்
3. இந்திரா நகர்
4. முத்தியால்பேட்
5. காலாப்பட்டு
6.உருளையன்பேட்
7. அரியாங்குப்பம்
8. நெட்டப்பாக்கம்
9.காரை தெற்கு
10.திருநள்ளாறு

ஆகியற்றின் நிலவரம் மாலை 4 மணிக்கு தெரிய வரும்.

மீதமுள்ள 8 தொகுதிகளான

.1.ஊசுடு
2. உழவர்கரை
3. தட்டாஞ்சாவடி
4. ராஜ்பவன்
5.முதலியார்பேட்
6. மணவெளி
7. பாகூர்
8.நிரவி பட்டினம்

ஆகியவற்றின் நிலவரம் இரவு 11 மணிக்கு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணும் பணியில் சுமார் 1000 அலுவலர்களும் இப்பகுதியில் மட்டும் 400 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்றும் நாளையும் ஊரடங்கு கட்டுபாடுகள் தொடர்கின்றன. மேலும் வெற்றி விழாக்களுக்கு தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து திமுக முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: