திமுகவில் இருந்து வெளியேறுகிறார் புதுச்சேரி மாநில இளைஞரணி அமைப்பாளர் - பரபரப்பு குற்றச்சாட்டுரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மூலக்குளம் ஈத்கா பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்து வெளியில் வந்த திமுக மாநில இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், புதுச்சேரியில் தான் வகித்து வந்த மாநில இளைஞரணி அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், கனத்த இதயத்தோடு திமுகவிலிருந்து வெளியேறுவதாகவும் அவர் கூறினார். தற்போது மாநில அமைப்பாளராக உள்ள சிவா தன்னை ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கி உள்ளார்.
அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பின்பு இஸ்லாமிய மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் என்று குற்றம்சாட்டிய முகமது யூனுஸ் மாநில அமைப்பாளர் சிவாவை கண்டித்து கட்சியை விட்டு வெளியேறுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 1991 ஆம் ஆண்டு முதல் திமுகவில் கட்சி பணியாற்றி வந்ததாகவும் சுமார் 30 ஆண்டுகாலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் செயல்படி நடந்து கொண்டதாக தெரிவித்த முகமது யூனுஸ் 2012 ஆம் ஆண்டு முதல் மாநில இளைஞரணி அமைப்பாளராக பதவியேற்றேன் தொடர்ந்து பணியாற்றுவதற்கு பொருளாதாரத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Must Read : Ramzan | உலக அமைதி, கொரோனா தொற்று நீங்க வேண்டி மதுரையில் சிறப்பு தொழுகை
தனது மக்கள் சேவை தொடரும் என்று கூறிய முகமது யூனுஸ், அடுத்த கட்ட முடிவுகள் பற்றி ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.