• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீச்சு... போலீசார் தீவிர விசாரணை

புதுச்சேரியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீச்சு... போலீசார் தீவிர விசாரணை

உயிரிழந்த ராஜ ஸ்ரீ

உயிரிழந்த ராஜ ஸ்ரீ

புதுச்சேரியில் கல்லூரி மாணவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டுள்ளார்.

  • Share this:
புதுச்சேரி சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்த ராமன் என்பவரது மகள் ராஜ ஸ்ரீ. இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு  பொறையூர்பேட் பகுதியை சேர்ந்த பிரித்விஷ் என்ற தனது காதலனுடன் பைக்கில் சென்றுள்ளார். இதில் கஞ்சா பழக்கம் கொண்ட பிரித்விஷ் தனது சக நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அந்த மாணவியை துன்புறுத்தியதாக தெரிகிறது. மேலும் அவளை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டு பகுதியில் வீசிவிட்டு சென்று விட்டனர்.

இந்நிலையில் வழக்கறிஞரை சந்தித்து தங்களுக்கு அவர்கள் முன்ஜாமீன் கேட்ட போது உண்மை தெரியவந்தது. இதனை அறிந்த வில்லியனூர் போலீசார் விரைந்து சென்று தேடியதில் 3 மனி நேரத்திற்கு பிறகு பிணத்தை கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு பிரேத பரிசோதனைக்கக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதில் இறந்தது ராஜ ஸ்ரீ என்பதை உறுதி செய்தனர்.

அதனைத் தொடர்ந்து குற்றம் செய்த 3 பேரை போலீசார் அடையாளம் கண்டு தேடி வருகின்றனர். இது குறித்து காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க... கிருஷ்ணகிரியில் போலியாக கொரோனா நெகடிவ் சான்று தயாரித்த இளைஞர் கைது..



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: