கொரோனாவில் இருந்து விடுபட சனி பகவானை காணொலி மூலம் வழிபட்ட புதுவை முதல்வர்

காரைக்கால் திருநள்ளாரில் உள்ள புகழ் பெற்ற சனி பகவான் கோயிலில் நவக்கிரக சாந்தி ஹோமம் இன்று நடைபெற்றது.

கொரோனாவில் இருந்து விடுபட சனி பகவானை காணொலி மூலம் வழிபட்ட புதுவை முதல்வர்
முதலமைச்சர் நாராயணசாமி
  • Share this:
காரைக்காலில் உலக புகழ்பெற்ற சனிபகவான் கோயிலில் தோஷங்கள் விலக நவக்கிரக சாந்தி ஹோமம் நடைபெறுவது வழக்கம்.

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இந்த ஹோமம் அரசின் வழிகாட்டுதலுடன் இணையம் வழியே நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஹோமத்திற்கு பணம் செலுத்தும் பக்தர்களுக்கு இணையம் வழியே வழிபட இணைப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதை காணொளி மூலம் முதலமைச்சர் நாராயணசாமி இன்று துவக்கி வைத்தார்.

ALSO READ :  இணையத் தாக்குதல்களை நிறுத்துங்கள் - விஜயலட்சுமி விவகாரத்தில் காயத்ரி ரகுராம் காட்டம்

கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும் உலக நன்மை வேண்டியும் இன்று நடந்த ஹோமத்தை முதல்வர் நாராயணசாமி தனது இல்லத்தில் இருந்து காணொலி மூலம் வழிபட்டார்.

மேலும் இ-நவக்கிரக சாந்தி ஹோமத்தில் பங்குபெற விரும்புவர்கள் கோயில் இணைய தளம் வழியே பதிவு செய்ய தேவஸ்தானம் கேட்டு கொண்டுள்ளது.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading