Home /News /national /

'அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும்' - முதலமைச்சர் ரங்கசாமி

'அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும்' - முதலமைச்சர் ரங்கசாமி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

காவல்துறையில் காலியாக உள்ள 1,500 பணியிடங்கள் விரைவாக நிரப்படும் என்ற முதலமைச்சர் ரங்கசாமி, காவல்துறைக்கு தான் தீய சக்திகளை அடக்கும் சக்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.

    அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களும் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி காவல்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோரிமேட்டில் உள்ள காவலர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு புதிய காவலர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்கள்.

    விழாவில் பேசிய  முதலமைச்சர் ரங்கசாமி , புதுச்சேரி காவல்துறையில் கடந்த 2015-ல் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதன்பிறகு இப்போது தான் காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இதில் வயது வரம்பு கடந்ததால் பலருக்கு வருத்தம் இருந்தாலும் காவலர் தேர்வு நியாயமான முறையில் நடந்துள்ளது என்றார். காவல்துறையில் காலியாக உள்ள 1,500 பணியிடங்கள் விரைவாக நிரப்படும் என்ற முதலமைச்சர், காவல்துறைக்கு தான் தீய சக்திகளை அடக்கும் சக்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதையும் படியுங்கள் | பீட்சாவிற்கு பதில் ஆப்பம்... பர்கருக்கு பதில் புட்டு சாப்பிடுங்கள் - தமிழிசை சௌந்தரராஜன்

    மேலும் காவல்துறை உங்கள் நண்பன் என்பதை மனதில் வைத்து கொண்டு பணியாற்ற வேண்டும். காக்கி சட்டை அணிந்தவுடன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த கூடாது. இளநிலை மற்றும் மேல்நிலை எழுத்தர் பணியிடங்கள் நிரப்ப உள்ளோம். 125 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

     

    அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களும் அறிவித்தப்படி தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் புதுச்சேரி காவல்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்தமோகன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Government jobs, Puducherry

    அடுத்த செய்தி