புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசைக்கு ஆசி வழங்கிய முதல்வர் ரங்கசாமி!

ஆளுநர் தமிழிசைக்கு ஆசி வழங்கிய முதல்வர் ரங்கசாமி!

அமைச்சரவை பட்டியலை அளிக்க ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் ரங்கசாமி வருகை வந்தார்.

  • Share this:
புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசைக்கு, முதல்வர் ரங்கசாமி ஆசி வழங்கிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டு தெலுங்கானாவின் ஆளுநராக இருந்த தமிழிசை புதுச்சேரிக்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். முதலமைச்சர் ரங்கசாமிக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கான கடிதத்தை அவர் கொடுக்க வந்தபோது, ரங்கசாமிக்கு தமிழிசை வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதுது, எப்போது முதல்வர் பதவி ஏற்பு..? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அண்ணன் (ரங்கசாமி) நல்ல நேரம் பார்த்து சொல்வதாக ரங்கசாமி கூறியுள்ளார். அவர் சொல்லும் தேதியில் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு அடுத்தபடியாக இன்று அமைச்சரவை பட்டியலை அளிக்க ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் ரங்கசாமி வருகை வந்தார். அப்போது அவர் ஆளுநர் தமிழிசைக்கு சால்வை அணிவித்தார். தொடர்ந்து கையை தலை மேல் வைத்து ஆசீர்வாதமும் செய்தார்.

ஒரு துணைநிலை ஆளுநரை முதலமைச்சர் ஆசீர்வாதம் செய்யும் இந்த காட்சி வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Published by:Esakki Raja
First published: