புதுச்சேரி முதல்வருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை

பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் தனிமைப்படுத்திக்கொள்ள முதல்வர் நாராயணசாமிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது

புதுச்சேரி முதல்வருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
  • Share this:
புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி உட்பட அவரது வீடு, அலுவலகத்தில் பணிபுரிவோர் 74 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை எடுக்கப்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் கொரோனா தொற்றால் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சட்டப்பேரவை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு
இரண்டு நாட்களுக்கு முதல்வர் அலுவலகம் உட்பட சட்டமன்ற வளாகம் மூடப்பட்டுள்ளது.


இதனிடையே பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் தனிமைப்படுத்திக்கொள்ள முதல்வர் நாராயணசாமிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட அவரது வீடு, அலுவலகத்தில் பணிபுரியும் 74 பேருக்கு கரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய உமிழ் நீர் மாதிரி எடுக்கப்பட்டது.

முதல்வர் நாராயணசாமி மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு அவரது வீட்டிலும் அவரது வீடு, அவரது அலுவலகத்தில் பணிபுரிவோர் தொடங்கி பாதுகாப்பு போலீஸ் படையினர் கோரிமேட்டிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் நடந்தது.

மேலும் முதல்வர் வீட்டில் பணிபுரிவோருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டது. முதல்வர் மற்றும் அவரை சார்ந்தோருக்கான பரிசோதனைகள் ரகசியமாக சுகாதாரத்துறை எடுத்துள்ளது.

Also read... ’முகக்கவசம் & 2 அடி இடைவெளி’ இரண்டுமே கொரோனாவுக்கு மருந்து - பிரதமர் மோடி

முதல்வர் நாராயணசாமிக்கு கடந்த ஏப்ரல் மாதமே பரிசோதனை செய்யப்பட்டிருந்தாலும் தற்போது மீண்டும் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் பரிசோதிக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் முதலமைச்சர் உட்பட யாருக்கும் தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading