முகப்பு /செய்தி /இந்தியா / CM Rangasamy: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி!

CM Rangasamy: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட இரண்டே நாட்களில் ரங்கசாமி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று (மே 7) அவர் புதுச்சேரியின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட இரண்டே நாட்களில் ரங்கசாமி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்ட ரங்கசாமிக்கு, இன்று தொற்று உறுதியானது. கடந்த நான்கு நாட்களாக உடல் சோர்வுடன் இருந்த அவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக குன்னம் தொகுதி எம்.எல்.ஏவும் தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ் எஸ் சிவசங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எஸ் எஸ் சிவசங்கர் கலந்து கொள்ளவில்லை.

First published:

Tags: Covid-19, COVID-19 Second Wave, Puducherry