ஹோம் /நியூஸ் /national /

நடிகர் சூர்யா கருத்தை நீதிமன்றம் பெரிதுபடுத்தக்கூடாது - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்..

நடிகர் சூர்யா கருத்தை நீதிமன்றம் பெரிதுபடுத்தக்கூடாது - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்..

முதலமைச்சர் நாராயணசாமி

முதலமைச்சர் நாராயணசாமி

பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. எதார்த்தமாக பேசியதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என நீதியரசர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நீதிமன்றத்தை பற்றி நடிகர் சூர்யா  கூறியது எதார்த்தமான வார்த்தை. இதனை நீதிமன்றம் பெரிது படுத்தக்கூடாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,கொரோனா நோய்த்தொற்று மற்றும் இறப்பை குறைக்கும் வகையில் வீடுவீடாக சென்று பரிசோதனை செய்யும் மருத்துவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் புதுச்சேரியில் நோய்த்தொற்று குறைக்க துணைநிலை ஆளுநர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குகின்றனர் என்றும் கூறினார்.

புதுச்சேரியில் தற்போது சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர்,நீட்தேர்வு புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையில்லை என பலமுறை தான்  தெரிவித்துள்ளேன் என சுட்டிக்காட்டி, நடிகர் சூர்யா நீட் தேர்வு குறித்து ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

Also read... உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு - சட்ட மசோதா நிறைவேற்றம்..

அவர் நீதிமன்றத்தை பற்றி கூறியது எதார்த்தமான வார்த்தை இதனை நீதிமன்றம் பெரிது படுத்தக்கூடாது என வலியுறுத்தினார். அவர் எந்த உள்நோக்கமும் இன்றி கூறியுள்ளார்.

இதை ஒரு பொருட்டாக கருதாமல் விட்டுவிட வேண்டும். பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. எதார்த்தமாக பேசியதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என நீதியரசர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Surya, Narayana samy