வங்கிக் கணக்குக்கு 15 லட்சம் வந்ததா எனக்கேட்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.. புதுச்சேரி சட்டப்பேரவையில் சலசலப்பு...

நாராயணசாமி

பொதுக்கூட்டத்தில் பேசுவது போல முதல்வர் நாராயணசாமி பேசி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

 • Share this:
  புதுச்சேரி சட்டப்பேரவை 10 மணிக்கு கூடிய நிலையில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய அவர், ஐந்து ஆண்டு கால ஆட்சி குறித்து உருக்கமாக பேசி வருகிறார். சட்டப்பேரவையில் பேசிய அவர், ”இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. முடிய இன்னும் சில நாட்களே உள்ளது. சோனியாகாந்தி, ஸ்டாலின் ஆதரவால் முதல்வரானேன். நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் மக்கள் எனக்கு அளித்தனர” என்றார்.

  தொடர்ந்து பேசிய அவர், "மாநில பட்ஜெட்டில் அறிவித்ததில் 95 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம். ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடைபெற்றுவருகிறது. தேர்தல் வாக்குறுதியை காப்பாற்றிய பெருமை எங்கள் அரசுக்கு உண்டு. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எவ்வளவு இக்கட்டு வந்தாலும் புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து போரோடினோம்.

  மக்களால் புறக்கணிப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். மாநிலத்தை வருமானத்தை குறைக்க வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினார்கள். புதுச்சேரி மாநிலத்துக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை. நான்கு ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர் கட்சிகள் தற்போது அஸ்திரத்தை எடுக்கின்றனர். எங்களது உறுப்பினர்கள் ஒற்றுமையால் ஆட்சி 5 ஆண்டுகள் செயல்பட்டது. புதுச்சேரி மாநிலம் மட்டும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறது.

  பலமுறை போராடியும் புதுச்சேரிக்கு மாநில அந்துஸ்து கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது. கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக சம்பளமா கொடுத்த மாநிலம் என்ற பெருமையை புதுச்சேரி மாநிலம் பெற்றுள்ளது. திட்டமிட்டு மதுபான உரிமையாளர்களை தாக்கினார்..பல வழக்குகளை என்னையும் மீறி போட்டார்கள்" என்று பேசினார்.

  மேலும் பேசிய அவர், “கருப்புப்பணம் மீட்கப்பட்டதா, வங்கிக் கணக்குக்கு 15 லட்சம் வந்ததா? எனக்கு வரவில்லை, உங்களுக்கு வந்ததா?” என்று முதல்வர் நாராயணசாமி கேட்டதும், பொதுக்கூட்டத்தில் பேசுவது போல முதல்வர் பேசி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
  Published by:Gunavathy
  First published: