பெட்ரோல், கேஸ் கடும் விலை உயர்வு: புதுச்சேரியில் ஆட்டோக்களை கயிறு கட்டி இழுத்து, மொட்டை அடித்து சி.ஐ.டி.யு போராட்டம்

புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Share this:
மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், கேஸ் விலை உயர்வால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சி.ஐ.டி.யு ஆட்டோ தொழிலாளர்கள் ஆட்டோக்களுக்கு கயிறு கட்டி மாடு வண்டி இழுப்பது போல் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோக்களை இழுத்து வந்தும், மொட்டை அடித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரம் இழக்கும் சூழ்நிலை உருவாவதை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறும் வகையில் சி.ஐ.டி.யு ஆட்டோ தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கயிறு கட்டி மாட்டு வண்டி போல் ஆட்டோக்களையும், கனரக வாகனங்களையும் இழுத்துவந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொங்கவிடப்பட்டுள்ள சிலிண்டர்


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும் கேஸ் சிலிண்டரை மரத்தில் தொங்கவிட்டு மாலை அணிவித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதால் தங்களிடம் எதுவுமில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் தங்களது தலைமுடியை மொட்டை அடித்து மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published by:Karthick S
First published: