• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

ரங்கசாமி

ரங்கசாமி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி முதல் தவணை கொரோனா தடுப்பூசி இன்று செலுத்திக் கொண்டார்.

  • Share this:
    சீனாவின் வூஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது வரை தொடர்ந்து பாதித்துவருகிறது. கொரோனா பாதிப்பை தடுத்து நிறுத்த உலக நாடுகள் அனைத்து தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன. இந்தியாவிலும் இந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இதில், கோவேக்சின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியாகும்.

    கோவிஷீல்டு இங்கிலாந்திலும், ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ரஷ்யாவிலும் தயாரிக்கப்பட்டவை. இந்தநிலையில், இந்தியாவின் சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்த சைகோவ்-டி கொரோனா தடுப்பூசி இந்திய மருந்துகள் ஒழுங்குமுறைக் கழகம் அனுமதியளித்துள்ளார். இளைஞர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்துவதற்கு அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் 12 முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரி ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. அமெரிக்க மருந்து நிறுவனமான ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் ஒரே தவணை செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசிக்கு ஏற்கனவே அவசரகால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கு இந்த தடுப்பூசியை பரிசோதிக்க அனுமதி கோரி மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

    தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. இந்தக் கூட்டணி சார்பில் ரங்கசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு மே மாதம் 9-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சிகிச்சை முடிந்து மே 17-ம் தேதி வீடு திரும்பினார். கொரோனா பாதிப்புக்கு பின் மூன்று மாதம் முடிந்த நிலையில் இன்று அவரது வீட்டில் சுகாதாரத்துறை ஏற்பாட்டின் பேரில் அவர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அவருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: