தரவரிசையில் 9-வது இடத்துக்கு முன்னேறியது புதுவை மத்திய பல்கலைக்கழகம்!

தரவரிசையில் 9-வது இடத்துக்கு முன்னேறியது புதுவை மத்திய பல்கலைக்கழகம்!
புதுச்சேரி பல்கலைக்கழகம்
  • News18
  • Last Updated: September 15, 2020, 12:39 PM IST
  • Share this:
இந்தியப் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் மத்திய பல்கலைக்கழக தரவரிசையில் 9-வது இடத்துக்கு புதுவை மத்திய பல்கலைக்கழகம் முன்னேறியுள்ளது.

இதுதொடர்பாக புதுவை மத்தியப் பல்கலைக்கழகம்  வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில், அவுட்லுக்-ஐகேர் அண்மையில் வெளியிட்ட  2020 இந்தியப் பல்கலைக் கழக தரவரிசையில், புதுவைப் பல்கலைக்கழகம்  குறிப்பிடத்தக்க வகையில் தனது தகுதிப் புள்ளிகளை அதிகரித்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் 9-வது இடத்தையும், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் பிரிவில் 45-வது இடத்தையும் பெற்றுள்ளது.


ஒட்டுமொத்தமாக 1000 புள்ளிகளில் 647.63 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது என கூறியுள்ளது. புதுவை பல்கலைக்கழகம் கல்வி மற்றும் ஆராய்ச்சி சிறப்பிற்காக 277.20 புள்ளிகளையும், தொழில்  மற்றும் வேலைவாய்ப்புக்காக 134.62 புள்ளிகளையும், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்காக 77.53 புள்ளிகளையும், ஆளுமை மற்றும் சேர்க்கைகளுக்கு 99.6 புள்ளிகளையும், பன்முகத்தன்மைக்கு  58.68 புள்ளிகளையும் பெற்றுள்ளது.Also read... மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வழக்கு: தீபக் தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்தது நீதிமன்றம்..

கடந்த காலத்தை ஒப்பிடும்போது இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். 2019-ம் ஆண்டின் தரவரிசையில் புதுவைப் பல்கலைக்கழகம் மத்திய பல்கலைக்கழகங்களில் 11-வது இடத்தைப் பிடித்தது, இப்போது 2 புள்ளிகள்  முன்னேறி 9-வது இடத்தைப் பெற்றுள்ளது.இதனால் நாட்டின் சிறந்த 10 மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்று என்ற மதிப்புமிக்க நிலையை அடைந்துள்ளது. மேலும், 2019 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் பிரிவில் தரவரிசையில் புதுவைப் பல்கலைக்கழகம் 67-வது இடத்தைப் பெற்றுள்ளது, இப்போது 22 புள்ளிகள்  முன்னேறி, இந்த பிரிவில் 45-வது இடத்தைப் பெற்றுள்ளது.

நாட்டின் சிறந்த 50 கல்வி நிறுவனங்களில் ஒன்று என்ற பெருமையை புதுவை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது என்றும் செய்தி குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading