புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்... புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அனுமதி

மாணவர்கள் ஐந்து பாடங்களை தேர்வு எழுதினால் சில பாடங்களை ஆப்லைனிலும், சில பாடங்களை ஆன்லைனிலும் கலந்து எழுதலாம்.

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்... புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அனுமதி
புதுச்சேரி பல்கலைக்கழகம்
  • News18
  • Last Updated: September 18, 2020, 5:14 PM IST
  • Share this:
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

புதுச்சேரிகல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இறுதிசெமஸ்டர் தேர்வில் புத்தகங்களைப் பார்த்து ஆன்லைனிலும், ஆப்லைனிலும் விடையளிக்கலாம் என்று புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு வரும் 21ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு நடக்கிறது. தேர்வுகளை கணினி மூலம் ஆன்லைனிலும், தேர்வு மையங்களுக்கு வந்து ஆப்லைனிலும் எழுதலாம்.


இந்நிலையில்  இறுதி செமஸ்டர் தேர்வு தொடர்பாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் லாசர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு ஆப்லைனிலும், ஆன்லைனிலும் நடத்தப்படும். மாணவ, மாணவியர் தாங்கள் விரும்பும் முறையில் தேர்வு எழுதலாம்.

மாணவர்கள் ஐந்து பாடங்களை தேர்வு எழுதினால் சில பாடங்களை ஆப்லைனிலும், சில பாடங்களை ஆன்லைனிலும் கலந்து எழுதலாம். பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல் படி இறுதி செமஸ்டர் தேர்வின்போது புத்தகம், குறிப்பேடு உடன் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதலாம்.

திறந்த புத்தகத் தேர்வு முறையில் தேர்வு எழுத மாணவர்கள் தேர்வு அறைக்கு புத்தகங்கள், குறிப்புகள், பிற ஆய்வு பொருட்கள் எடு்த்து வரலாம். கொரோனாவால் மாணவர்களிடம் உள்ள குறிப்பு பொருட்களை யாரும் பரிமாறாமல் இருப்பதை கண்காணிப்பாளர்கள் உறுதி செய்வார்கள்.Also read... நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை - தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி..

தேர்வுகளின் காலம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் பழைய முறைப்படி தொடரும்.மாணவர்கள் ஆன்லைனில் தேர்வை ஏ4 வெள்ளைத்தாளில் கருப்பு மைக்கொண்டு பதில் தரவேண்டும். பிறகு அத்தாள்களை ஸ்கேன் செய்து தேர்வு முடிந்து 30 நிமிடங்களுக்குள் அனைத்து பக்கங்களையும் பிடிஎப் கோப்பாக மாற்றி அனுப்பவேண்டும்.

மாணவர்கள் தங்கள் பதிவு எண், பொருள், பாடநெறி, தேதி மற்றும் முழு கையொப்பத்தை முதல் பகத்தில் எழுத வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கல்லூரிகளுக்கு துணைவேந்தர் உத்தரவுபல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீந்த் சிங் இன்று சமூக வலைத்தளப்பதிவில், "மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுத உள்ள பாடங்கள் ஆன்லைனிலா, ஆப்லைனிலா என்பதை கல்லூரி நிர்வாகத்தில் தெரிவிக்கலாம்.

எம்முறையில் தேர்வு எழுத வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading