நான்கு மாநிலங்களில் வெற்றி - பாரத மாதாவுடன் பாஜகவினர் ஊர்வலம்
நான்கு மாநிலங்களில் வெற்றி - பாரத மாதாவுடன் பாஜகவினர் ஊர்வலம்
பாரதமாதாவுடன் பாஜகவினர் ஊர்வலம்
Puducherry BJP | உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் புதுச்சேரி பாஜகவினர் அண்ணா சாலையில் இருந்து வெற்றி கொண்டாட்டம் ஊர்வலம் நடத்தினர்.
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை புதுச்சேரியில் வெற்றி ஊர்வலமாக கொண்டாடினார்கள்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியது. இதில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் புதுச்சேரி பாஜகவினர் அண்ணா சாலையில் இருந்து வெற்றி கொண்டாட்டம் ஊர்வலம் நடத்தினர்.
பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக நிர்வாகிகள் மகளிர் அணியினர் என பலரும் அண்ணா சாலையில் இருந்து மிஷன் சாலை வரை மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வெற்றி ஊர்வலத்தை நடத்தினர்.
இதில் மகளிர் அணி சார்பில் பாரதமாதா வேடமணிந்து குதிரை மேல் அமர்ந்தும், பல்வேறு கலைஞர்கள் வண்ணப் பொடிகளைத் தூவியும் வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடினர்.
தொடர்ந்து பேசிய மாநில தலைவர் சாமிநாதன், வருகின்ற 2024 எதிர்க்கட்சிகள் இல்லாத ஆட்சியாக பாஜக ஆட்சி அமையும் என்றும் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எதிர்க் கட்சிகளை அதாவது காங்கிரஸ் இல்லாத பாஜக அமைந்துள்ளதாகவும் வரும் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பாஜக ஆளும் எனவும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.