Home /News /national /

ஆப்ரேசன் விடியல்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது

ஆப்ரேசன் விடியல்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது

கஞ்சா விற்பனை

கஞ்சா விற்பனை

Cannabis Seized | கஞ்சா விற்பனைசெய்ததாக கைது செய்யப்பட்ட 8  பேரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள்,  4 மோட்டார் சைக்கிள்கள், 10 ஆன்ராய்டு போன்கள், 1 சாதா போன் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில்  கஞ்சா விற்பனை செய்த கல்லுாரி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1/2  கிலோ கஞ்சா பொட்டலங்கள், 4 மோட்டார் சைக்கிள் மற்றும் 11 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார், ‘ஆபரேஷன் விடியல்’ என்ற பெயரில் திட்டம் வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கலிதீர்த்தாள்குப்பம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுதாக ரகசிய தகவல் கிடைத்தது.  இது குறித்து புதுச்சேரி மேற்கு பகுதி போலீஸ் எஸ்.பி., ஜிந்தாகோதண்டராமன் உத்தரவின்பேரில், திருபுவனை  குற்றப் பிரிவு போலீசார் கலிதீர்த்தாள்குப்பம் வி.பி.சிங் நகரில்   131சி என்ற எண்ணுள்ள வீட்டை சுற்றிவளைத்தனர்.

அங்கிருந்த 6 பேரையும் சோதனை செய்ததில் அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 6 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அந்த வீட்டை வாடகை எடுத்து தங்கி அருகில் உள்ள தனியார் மருத்துவ தொழில்நுட்ப கல்லுாரியில் படித்து வரும், காரைக்கால் மேல் மாஞ்சூர் விசாலாட்சியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த  ராஜேஷ் (21), காரைக்கால் முருகராம் தியேட்டர் பின்புறம், மரியம் அவென்யூ பகுதியை சேர்ந்த  வீரகலைமணி, (23). ஆகிய இரண்டு மாணவர்களும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை  செய்து வந்தது தெரியவந்தது.

இதையும் படியுங்கள் |  தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றம்... புதிய மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு

மேலும்  திருபுவனை பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த தாமோதரன் (22), திருபுவனை பிள்ளையார்கோவில் வீதியை சேர்ந்த  ஆகாஷ் (22), அரியூர் அருண்குமார் (23),  திருபுவனை பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த   விக்னேஷ்குமார் (26) ஆகிய 4 பேரும் கல்லுாரி மாணவர்களுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 150 கிராம் எடையுள்ள ஒரு கஞ்சா பொட்டலம் மற்றும் தலா 10 கிராம் எடையுள்ள 20 கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் 5 கிராம் எடையுள்ள 10 கஞ்சா பொட்டங்கள் உள்பட மொத்தம் 550 கிராம் கஞ்சா  மற்றும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



இவர்கள் கலிதீர்த்தாள்குப்பம் மற்றும் திருபுவனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா பொட்டங்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று காலை திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் கஞ்சா விற்கப்படுதாக வந்த தகவலின்பேரில் திருபுவனை போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த எழில், காமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 125 கிராம் கஞ்ச பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.



விசாரணையில் இவர்களுக்கு  கஞ்சா விற்கும்படி கொடுத்த திருபுவனையை சேர்ந்த சுவை (எ)( சூர்யா, அய்யப்பன், சன்னியாசிக்குப்பத்தை சேர்ந்த வேல்முருகன்  ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். கஞ்சா வழக்கில் கலிதீர்த்தாள்குப்பம், மற்றும் திருபுவனையில் கைது செய்யப்பட்ட 8  பேரிடம் இருந்து மொத்தம் கஞ்சா பொட்டலங்கள்,  4 மோட்டார் சைக்கிள்கள், 10 ஆன்ராய்டு போன்கள், 1 பேசிக் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, 8 பேரையும் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Cannabis, Crime News, Puducherry

அடுத்த செய்தி