போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.. பேருந்து சேவையின்றி புதுச்சேரியில் பயணிகள் அவதி
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.. பேருந்து சேவையின்றி புதுச்சேரியில் பயணிகள் அவதி
puducherry strike
கடந்த 2 ஆண்டுகளாக போனஸ் வழங்கப்படாததை கண்டித்து, புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடத்துவதால், பேருந்து சேவையின்றி பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் புதுவை, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் , புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் 800 அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக போனஸ் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
இதனால் காலை 7 மணி முதல் நகர மற்றும் தொலைதூரம் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னை, பெங்களூரு, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் எந்த பேருந்துகளும் இன்று இயக்கப்படவில்லை. புதுச்சேரியில் மொத்தம்155 அரசு பேருந்துகள் உள்ளன. அதிலும் இயக்க தகுதியான நிலையில் 60 பேருந்துகள் மட்டுமே உள்ளன. வேலை நிறுத்தம் காரணமாக கிராம புறங்களுக்கு இயக்கும் அரசுப் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
நகர பகுதிகளில் ஆட்டோக்களும், டெம்போக்களும் இன்று இயங்கி வருகின்றன. தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகளும், புதுச்சேரியில் இயங்கும் தனியார் பேருந்துகளும் வழக்கம்போல இயங்கி வருகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.