ரூ.9250 கோடிக்கு புதுச்சேரி பட்ஜெட்.. மத்திய அரசு அனுமதிக்கு கோப்பு அனுப்பி வைப்பு!

புதுச்சேரி சட்டமன்றம்

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்த பிறகு புதிய அரசு அமைந்த பின்பு முழு பட்ஜெட் தாக்கலாகும் என்றும், இடைக்கால பட்ஜெட் ஆகஸ்ட் வரை தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

  • Share this:
புதுச்சேரியில் நடப்பு நிதியாண்டில் ரூ.9250 கோடிக்கு புதுச்சேரி  பட்ஜெட்டுக்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தலுக்கு நெருக்கத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி அரசு கவிழ்ந்தது. அதனால்  பட்ஜெட்டை காங்கிரஸ் அரசால் தாக்கல் செய்ய முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதைத் தொடர்ந்து ஜனாதிபதி  ஆட்சி புதுச்சேரியில் அமலானது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் புதுச்சேரி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்த பிறகு புதிய அரசு அமைந்த பின்பு முழு பட்ஜெட் தாக்கலாகும் என்றும், இடைக்கால பட்ஜெட் ஆகஸ்ட் வரை தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி பொறுப்பேற்று 50 நாட்களுக்கு பிறகு கடந்த 27ந் தேதி அமைச்சர்கள் பதவியேற்றனர். ஆனால் அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப் படவில்லை.

Also read: 320 கோடி ரூபாயில் புதிய சட்டப்பேரவை வளாகம்!

இந்த நிலையில் ரூ. 9250 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய அனுமதி கேட்டு கோப்பினை அனுப்பியுள்ளார். வழக்கமாக அமைச்சரவை கூடி இறுதி செய்து பட்ஜெட் கோப்பு அனுப்புவது வழக்கம்.

தற்போது அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்காததால் பட்ஜெட் தொடர்பான கோப்பில் அமைச்சர்கள் கையெழுத்து பெற்று மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டப்படாமல் அமைச்சர்களிடம் கையெழுத்து பெற்று மத்திய அரசுக்கு அனுப்பிய கோப்புக்கு விரைவில் அனுமதி வரும். அதையடுத்து ஆகஸ்ட்டில் பட்ஜெட் புதுச்சேரியில் தாக்கலாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Published by:Esakki Raja
First published: