• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்த திமுக: மக்களை குழப்புவதாக புதுச்சேரி பாஜக தலைவர் குற்றச்சாட்டு

ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்த திமுக: மக்களை குழப்புவதாக புதுச்சேரி பாஜக தலைவர் குற்றச்சாட்டு

புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன்

புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன்

ரங்கசாமியுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது...

  • Share this:
    புதுச்சேரியில் மதசார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு திமுக அழைப்பு விடுத்திருந்த நிலையில், காங்கிரசும் திமுகவும் மக்களை குழப்புவதாக புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

    ரங்கசாமி தலைமையில் மதசார்பற்ற கூட்டணி அமைக்க, திமுக கூட்டணி கட்சிகள் தயாராக இருப்பதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இதற்கு விரும்பம் தெரிவித்ததாகவும், காரைக்கால் திமுக அமைப்புச் செயலாளர் நாஜிம் கூறியிருந்தார்.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், மக்கள் நலன் கருதி ரங்கசாமி தேசிய ஜநாயக கூட்டணியில் நீடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    Must Read : புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம்: மதசார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க ரங்கசாமிக்கு திமுக அழைப்பு

     

    மேலும், “காங்கிரஸ் மற்றும் திமுகவிற்கு தோல்வி பயம் வந்து விட்டது” என்றும் அதனால், மக்களை குழப்பும் வேலையில் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் ஈடுபடுபட்டு வருவதாகவும் கூறினார். மேலும், ரங்கசாமியுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    30 தொகுதிகளைக் கொண்ட, புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் தமிழகத்தைப் போலவே ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: