• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரி பாஜகவில் பதவி சண்டை: ஆர்ப்பாட்டம், பெயர் பலகை கிழிப்பு!!

புதுச்சேரி பாஜகவில் பதவி சண்டை: ஆர்ப்பாட்டம், பெயர் பலகை கிழிப்பு!!

பாஜக அலுவலகத்தில் போராட்டம்

பாஜக அலுவலகத்தில் போராட்டம்

பதவி பகிர்வு தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான மனகசப்பு முடிந்துள்ள நிலையில், உட்கட்சி பிரச்சனையில் பாஜக சிக்கியுள்ளது

  • Share this:
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அலுவலக பெயர் பலகை கிழிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட  பாஜக என் ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. இதையடுத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த மாதம் முதலமைச்சராக பதவியேற்றார். சபாநாயகர் பதவி தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே இழுப்பறி நீடித்தது.  நீண்ட இழுபறிக்கு பின் பாஜகவின் ஏம்பலம் செல்வம் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

பதவி பகிர்வு தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான மனகசப்பு முடிந்துள்ள நிலையில், உட்கட்சி பிரச்சனையில் பாஜக சிக்கியுள்ளது.  காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த  ஜான்குமார் காமராஜ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே போன்று அவரது மகனும் நெல்லிதோப்பு தொகுதியில் வெற்றி பெற்று தற்போது அவரும் அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினராக பாஜகவில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறுபான்மை பிரிவை சேர்ந்த  ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக மாற்று நபருக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  இதையடுத்து காமராஜ் நகர் தொகுதி மற்றும் நெல்லித்தோப்பு தொகுதியில் இருந்து ஜான்குமார்  ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சித்தானந்தா நகர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் முன்பு குவிந்தனர்.

ஜான் குமாருக்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது புகைப்படம் இடம்பெற்றிருந்த பதாகையை வைத்து கோஷங்கள் எழுப்பினர்.  திடீரென அலுவலக முன்புள்ள ஷட்டரை உடைத்து பாஜக தலைமை அலுவலக பேனரை கிழித்தும்  அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த கட்சி நிர்வாகிகளும் காவல்துறையினரும்  சமாதானப்படுத்தியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

 

செய்தியாளர்: இளவமுதன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: