மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசார் மீது லோடு வேன் ஏற்றி கொல்ல முயற்சி

புதுச்சேரியில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற போலீசார் மீது, லோடு வேனை ஏற்ற முயற்சித்து 3 பேர் தப்பி ஓடியுள்ளனர்

மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசார் மீது லோடு வேன் ஏற்றி கொல்ல முயற்சி
காயமடைந்த போலீசார் மற்றும் பிடிபட்ட லோடு ஆட்டோ
  • News18
  • Last Updated: July 27, 2020, 8:07 AM IST
  • Share this:
புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தடையை மீறி நள்ளிரவில் மணல் திருட்டு என்பது நடைபெற்று வருகிறது. இதேபோன்று  கூனிச்சம்பட்டு கிராமத்தில்  நள்ளிரவு மணல் திருட்டு நடப்பதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்  சிவகுமார், காவலர் ராஜராஜன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்றனர். மணலை அள்ளிச் சென்ற மினி வேனை அவர்கள் தடுக்க முயன்றபோது அவர்கள் போலீசார் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விட்டு தப்ப முயன்றனர். இதில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் காயமடைந்தனர். இதனை கண்ட  மினி வேனில் வந்த 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

படிக்க: கொரோனா உறுதியான 3,338 பேரைக் கண்டறிய முடியாமல் திணறும் பெங்களூரூ மாநகராட்சி


படிக்க: சென்னையில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி - தற்கொலை என நாடகமாடியது அம்பலம்

படிக்க: நானும், 82 வயது எனது தந்தையும் கொரோனாவிலிருந்து மீண்டது இந்த மாத்திரையால்தான் - அனுபவம் பகிரும் விஷால் வீடியோ

இதனை அடுத்து மினி வேனை மீட்டு  காவல் நிலையத்துக்கு போலீசார் கொண்டு  வந்துள்ளனர். காயமடைந்த இரண்டு போலீசாரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கூனிச்சம்பட்டை  சேர்ந்த சிவா, ரஞ்சித், மணி ஆகியோரை தேடி வருகின்றனர்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading